காணொளி: ஹோர்மூஸ் நீரிணையில் அமெரிக்கா தாக்குதல் - இரான் கூறுவது என்ன?

காணொளி: ஹோர்மூஸ் நீரிணையில் அமெரிக்கா தாக்குதல் - இரான் கூறுவது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

ஹோர்மூஸ் நீரிணையில் மூன்று எண்ணெய் கப்பல்கள் மீது நடந்த தாக்குதலுக்கு பதிலடியாக இரான் மீது அமெரிக்கா கடும் தாக்குதல் நடத்தியுள்ளது. ஹோர்மூஸ் நீரிணையில் உள்ள 80-க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளை மையமான சென்ட்காம் தெரிவித்துள்ளது.

இரானின் கார்க் தீவு, கெஷ்ம் தீவு மற்றும் சிரிக், பண்டர் அப்பாஸ் துறைமுகங்களில் வெடிப்பு சத்தங்கள் கேட்டதாகவும், சிதறிய ஏவுகணை துண்டுகளால் பலர் காயமடைந்துள்ளதாகவும் இரான் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் இந்த தாக்குதல்கள், கடந்த மாதம் இருநாடுகளுக்கு இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தை மீறும் செயல் என்று கூறியுள்ள இரானின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர், இரான் இது குறித்து தீர்க்கமான நடவடிக்கை எடுக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால், அந்த மூன்று எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்கு இரான் இதுவரை நேரடியாக பொறுப்பெறக்கவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு