You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: ஜப்பானில் விற்கப்படும் 'ஹியூமன் ஃபிரிட்ஜ்'
ஜப்பானில் “டோ ஹியேமோன் பாக்ஸ்” என அழைக்கப்படும் ஒரு குளிர்ப்படுத்தும் பெட்டியை அறிமுகப்படுத்தியுள்ளனர். கடுமையான வெப்பத்தில் ஒருவரின் உடலை விரைவாக குளிர்விக்க வடிவமைக்கப்பட்ட பெட்டி இது. கட்டுமான தொழிலாளர்கள், தொழிற்சாலை பணியாளர்கள் போன்ற ஆபத்தான வெப்பத்தில் வேலை செய்பவர்களுக்காக இது உருவாக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் போன்ற அவசர காலங்களிலும் இதைப் பயன்படுத்தலாம், அப்போது மக்கள் கடுமையான வெயிலில் வெளியே காத்திருக்க வேண்டிய நிலை வரலாம். ஏனென்றால் ஜப்பானில் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும், 53,000-க்கும் மேற்பட்டோர் ஹீட் ஸ்ட்ரோக்குக்காக சிகிச்சை பெற்றுள்ளதாகவும், 79 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பெட்டி இப்போது பொது இடங்களில் நிறுவப்பட்டு வருகிறது. நிறுவனங்களுக்கும் விற்கப்படுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு